Thursday, August 16, 2012

அப்பாவின் மகள்

"அவனை  நான் காதலிக்கின்றேன் " என்றாள்  அவள்.
அனுமதிக்க  முடியாது  என்றார்  அப்பா.


இனி  அவனே  எனது  அவனி - பிடிவாதம்  பிடித்தாள்  அவள்
பிரம்பால்  அடித்தார்  அப்பா.


காலையில்  ஓடிவிட  வேண்டும்  காதலனுடன்  என்று 
நினைத்து  நித்திரையை  தழுவினாள் .


திடீர்  என்று  தூக்கம்  கலைந்தது

போர்வையின்  வழி  மெல்ல  விழிகளை  திறந்து  பார்த்தாள்  
அப்பாவின் விழி வழி வழிந்த கண்ணீர் அவள் பாதங்களை  நனைத்தது.

மெளனமாக  மன்னிப்பு  கேட்டது  அப்பாவின்  கண்ணீர்
ஆயிரம்  ஈட்டிகள்  அவள்  நெஞ்சை  துளைத்தது.

அவள்  விழி   வழி  வழிந்தது  கண்ணீர் 
போர்வையின்  சாயம்  கரைந்தது 
அவள்  காதலும்  கரைந்தது , அப்பாவின்   அன்பிற்கு  தோற்று !!

1 comment: